தொழிலாளர்களை வாழவைக்கும் அரசு, திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

may day

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மே தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மே தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்தனர்.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :

ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது. மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்தது கலைஞர் ஆட்சியில்தான்.

தொழிலாளர்களை வாழவைக்கும் அரசு. ஏழை, எளியவர்கள், பாட்டாளி மக்களுக்கான ஆட்சி இது. 

தொழிலாளர்களை போற்றுவோம். தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்' என்றார்.
*

Share this story