மது விற்பனையை மட்டுமே நாட்டின் வளர்ச்சியாக நினைக்கிறது அரசு : ஆளுநர் கடும் தாக்கு

liquor

கேரளா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் முற்றி வருகிறது.

இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கேரளா ஆளுநர் கூறியுள்ளதாவது: இங்கே, நமது வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம். 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலத்தின் அவமானகரமான நிலை இது.

மாநிலத்தின் ஆளுநரான நான், இந்த இரண்டு முக்கிய வருவாய் ஆதாரங்கள் குறித்து வெட்கப்படுகிறேன். லாட்டரி என்றால் என்ன?. இங்கே அமர்ந்திருக்கும் உங்களில் யாராவது லாட்டரி சீட்டு வாங்கியது உண்டா? மிகவும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள்.

நீங்கள் (கேரள அரசு) அவர்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறீர்கள். எல்லோரும் மது அருந்துவதற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். இங்கு மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது மிக அவமானம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this story