அரசு கஜானா கொள்ளை போகும்போது, அமைதியாக எப்படி இருக்க முடியும்? : கேரள கவர்னர் கேள்வி

keralac

கேரள கவர்னர் இன்று கூறும்போது, மந்திரிகளின் தனி உதவியாளர்கள் ஆயுள் முழுவதற்கும் பென்சன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இது ஒரு வகையில் கொள்ளை அடித்தல் ஆகும். அரரசாங்கத்தின் கஜானா பணம் கொள்ளை போகும்போது அதனை பார்த்து கொண்டு அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் அனைத்து ஆவண சான்றுகளும் நாளை ஊடகங்களுக்கு காட்டப்படும் என கூறியுள்ளார்.

இதேபோன்று, 3 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கேரள போலீசார் வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளனர் என குற்றச்சாட்டு கூறியுள்ள கவர்னர் ஆரிப், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது என்றும்,

உள்துறை மந்திரி பதவியையும் வகித்து வரும் அவரது தனிப்பட்ட உத்தரவின் பேரிலேயே போலீசார் அதுபற்றிய வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர் என்றும் ஊடகங்களிடம் குற்றச்சாட்டாக கவர்னர் கூறியுள்ளார்.
 

Share this story