மத உணர்வுகளை புண்படுத்தியதாக, எம்.பி. மீது வழக்குப் பதிவு..
 

kaali

காளி என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை எடுத்துள்ள ஆவண பட போஸ்டரில் இந்து பெண் தெய்வம் காளி, புகைபிடிப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது "காளிதேவியை மாமிசம் சாப்பிடுகிற, மது அருந்துகிற தெய்வமாக கற்பனை செய்வதற்கு தனி நபராக எனக்கு முழு உரிமை உள்ளது" என கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவரது இந்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதற்காக கண்டனம் தெரிவித்தது. 

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ரஞ்சி, மதன் மஹால், பனகர் மற்றும் படான் ஆகிய போலீஸ் நிலையங்களில் மகுவா மொய்த்ரா மீது புகார் அளிக்கப்பட்டது. 

மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 295-ஏ கீழ் அவர் மீது 4 வழக்குகளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
*

Share this story