முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : கவர்னர் ஆர்.என்.ரவி

stalin65

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தை கவர்னரின் முதன்மைச்செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் முதல்-அமைச்சர் வீட்டில் வழங்கினார். கவர்னர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள அந்த கடிதத்தில், 

கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, நான் மிகுந்த கவலையுற்றேன். 

வலிமைமிக்க தலைவரான தாங்கள், முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இந்த தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். 

தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
*

Share this story