வீதியில் இறங்கி போராடுவேன் : டெல்லியில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு 

kamal7

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

'நான் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என பலரும் வலியுறுத்தினார்கள். ஒரு இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்.

மாற்று கொள்கைகள் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். என்னுடைய தந்தை காங்கிரசைச் சேர்ந்தவர். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் எனக்கு சகோதரர். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன்.

அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Share this story