பதவி விலக மாட்டேன் : கோத்தபய ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு
 

gota

அதிபர் பதவி முடியும் வரை, பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும்  பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு நிறைவடைந்தது. 

இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், இன்று மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தும், அவர்கள் முன்வராததால், புதிய அமைச்சரவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்

Share this story