டெல்லியில், இன்று ஓ.பன்னீர்செல்வம் : அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன?

delhi

சென்னையில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சலசலப்புடன் முடிவடைந்தது. 

அவைத்தலைவராக, தமுழ்மகன் உசேன் தேர்வானார். மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 

இதில், கலந்துகொள்ளும்படி பாஜக சார்பில், அதிமுக தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்பேரில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சர்ந்த மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் இன்று இரவு டெல்லி செல்கிறார்கள். 

குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தபின்னர், பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பாஜக தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. 

இந்த சந்திப்பின்போது, அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து பேசலாம்' என தெரிகிறது.
*

Share this story