சேறுவாரி பூசுவதை விட்டு, வேறு வேலை பார்ப்பது உத்தமம் : மருது அழகுராஜ்

marudhu21

அரசியல் சதுரங்கத்தில்,  அதிமுகவில் நிகழும் தலைமை யுத்தம் யாவரும் அறிந்ததே.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அங்கீகாரத்தோடு, நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆசிரியராய் பணி புரிந்தவரும்,  பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலில், கட்சி நலனுக்காக 'நமது அம்மா' நாளிதழில் ஆசிரியராய்... முழு ஈடுபாட்டுடன்  பணியாற்றியவரும், "எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்" என அதிரடியாய் அறிவித்து,

தற்போது தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

அ.தி.மு.க விலிருந்து அகற்றப்பட வேண்டிய நரகாசுரன்  எடப்பாடியும் அவருக்கு வெறியூட்டும் சில அரக்கர்களும் தான்...  

 சம கால அரசியலில் நான் பார்த்த அதிக பட்ச நேர்மை ஓ.பி.எஸ்ஸிடம்  இருக்கிறது. 

 அவரால் மட்டுமே அ.தி.மு.க.வை வெற்றியை  நோக்கி  மீண்டும் வழி நடத்த முடியும்.. 

 நான் அரசியலில் இருந்து விலகியதற்கு காரணம், அரசியலுக்கு தேவையான அடிப்படை தகுதிகள்  என்னிடம் இல்லை 
 என்பதை உணர்ந்தது மட்டும் தான்.. 

 ஆனால் , ஒதுங்க நினைக்கும் அலைகளை காற்று விடுவதில்லை என்பது போல் ,

 நான் எடப்பாடி தரப்பால் கடத்தப்பட்டு விட்டேன் என்றும், அவரது கத்தைப் பணத்திற்கு விலை போய்விட்டேன் என்றும், அணுவளவும் உண்மை 
 இல்லாத அவதூறுகளை மனசாட்சி அற்றவர்கள் பரப்பி வருகின்றனர். 

 அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான்.. 

 என்னை, எமனை தவிர எவனாலும் கடத்த முடியாது. 

 எடப்பாடியின் பணத்தாலும்  என்னை மடக்க முடியாது .

 அம்மா தான்  உலகம் என  உளமார நினைக்கும் தொண்டர்கள்... அவர் அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ் தான் கழகம் என்னும்  தீர்க்கமான முடிவை, விரைவில் எடுப்பார்கள். 

 அப்போது.. எடப்பாடி கும்பலின் அபகரிப்பு முயற்சி  முறியடிக்கப்படும் என்பது சத்தியம். 

 எனவே என் மீது சேறு வாரி பூச அலையும் நண்பர்கள் வேறு வேலை பார்ப்பது உத்தமம் .

இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story