'தவழ்ந்தாமி' எனும் மனநோயாளியிடமிருந்து கட்சியை காப்பது தொண்டரது கடமை : ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாததாக அறிவிக்கக்கோ,ரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில், வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள்.
ஓ.பி.எஸ். தரப்பில் இன்னும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் கூறி வருகிறார்கள். இது தவிர கட்சியின் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவை செல்லாது என்றும் கூறுகிறார்கள்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ், 'எடப்பாடி எனும் மனநோயாளியிடமிருந்து.. கட்சியைக் காப்பது, கழகமே உலகமென வாழும் தொண்டரது கடமை' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
மனோஜ் பாண்டியனை நீக்கினார், மெளத்ரேயனை நீக்கினார், மருதுவை நீக்கினார், பிரபாகரனை நீக்கினார்..
அய்யப்பன் உட்பட அநேகரை நீக்கினார்..
இது போக, ஐந்தாண்டு காலத்தில்
'தவழ்ந்தாமிக்கு 'உகந்தவர் இல்லை என கருதி,
பல்லாயிரம் பேரை பட்டியல் தயாரித்து, பழி போட்டு நீக்கினார்..
பதவிப் பிச்சையிட்ட சசியை நீக்கினார்..
பக்கத் துணைநின்ற வைத்தியை நீக்கினார்..
பரிந்துரைத்த பாவத்தை செய்த, பதறாத பண்பாளர் பன்னீரையும் நீக்கினார்..
பண்ருட்டியாரை நீக்கினார்..
இவ்வளவு ஏன்..
நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அம்மாவை நீக்கினார்..
கூடவே.. புரட்சித் தலைவர் வகுத்த கட்சியின் அடிப்படை விதிகளை நீக்கினார்..
இவை தான், 'பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கும் ஆகாது..' என்னும் பழமொழிக்கு பொருந்தும் பழனிச்சாமியின் கிழிப்புகள் என்றால்,
ஐனநாயத்திற்கு எதிரான சர்வாதிகார சிந்தனை கொண்டோரை,
ஒரு வகை மன நோயாளிகளே என்கிறது மருத்துவ உலகம்..
அந்த வகையில், எடப்பாடியும் மனநோயாளிதான்...
ஆக, மனநோயாளியிடமிருந்து.. கட்சியை காப்பது கழகமே உலகமென வாழும் தொண்டரது கடமை.
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.