ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை : சட்டசபையில் இன்று தாக்கல்..
 

By 
jayalalitha

தமிழக சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இன்று செவ்வாய்க் கிழமையும், நாளையும் என 2 நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. இன்றைய  சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த அறிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கலாகிறது. 2 நாட்களும் கேள்வி பதிலும் இடம் பெறும்.

*

 

Share this story