காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

kasi1

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில், மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

பிரதமர் மோடி நவம்பர் 19 அன்று அருணாச்சலத்திற்கும் உ.பி.க்கும் விஜயம் செய்கிறார். அருணாச்சல பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி இட்டா நகரில் ரூ640 கோடி மதிப்பில் 690 ஏக்கர் பரப்பளவில் முதல் பசுமை வழி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார். மற்றும் 600 மெகாவாட் கமெங் நீர் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை மதியம் 2 மணிக்கு துவக்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

Share this story