காசி தமிழ்ச்சங்கமம் போல வேண்டும் : பிரதமர் மோடி அறிவுறுத்தல் 
 

By 
kasit

பா.ஜ.கவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களவையின் முதலமைச்சர்கள், பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகளுக்கு நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிகள் மூலம் கலாசாரம், பாரம்பரியம், நாகரீகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 9 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.

பா.ஜ.க தேசிய செயற்குழுவின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
 

Share this story