மத்திய அரசு மீது, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..

kejri3

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது :

பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில், மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க போராட வேண்டும். 

ஆனால், மத்திய அரசோ காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது. இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும். 

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது கண்டனத்துக்குரியது' என்றார்.

Share this story