பிரதமர் மோடியுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு..
 

By 
pm modi 17

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, கேரளாவின் தொழில்துறை முன்னேற்றத்திற்காக கொச்சி- பெங்களூரு தொழில் வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை வேகமாக முன்னேறி வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்காக, மாநில அரசு தற்போதைய சந்தை விலையைவிட நான்கு மடங்கு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்தார்.

மேலும், சில்வர்லைன் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஆனால், சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக கேரளா முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி கோட்டயம் மாதம்பள்ளியில் முதல் பெரிய போராட்டம் நடந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Share this story