கெட்டிக்காரன் புளுகு, ரெடி பண்ணுற லெட்டர் பேடுல தெரியும் : ஓபிஎஸ் தரப்பு அதிரடி

எம்ஜிஆரால் நிறுவப்பட்டு, ஜெ ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அஇஅதிமுக ஒரு பேரியக்கமாய் தழைத்தோங்கி இருந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, இக்கட்சியின் நிலை என்ன? இதன் போக்கு எங்கே? என்பது விவாதத்துக்குள்ளாகி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், சுருக்கமாக உணர்த்தியுள்ள செய்தித்துளிகள் வருமாறு :
அ.தி.மு.க.வை பிடித்து ஆட்டும் கொரோனா எடப்பாடி தான்.
அதிலிருந்து தொண்டர்களை காக்கிற தடுப்பு மருந்து ஓ.பி.எஸ் தான்.
'ஒரே பிராடு ஒரே மோசம்' என்னும் தலைப்பிலான கூட்டத்துக்கு மட்டுமே
அழைக்கப்பட தகுதியானவர் எடப்பாடி.
கெட்டிக்காரன் புளுகு, அவன் ரெடி பண்ணுற லெட்டர் பேடுல தெரியும்;
என்ன மிஸ்டர் எடப்பாடி.?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.