கோடநாடு வழக்கு : சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை

sasi2

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோடநாடு வழக்கில், சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை, இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. 

இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர்? யார் மூலம் வேலையாட்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். 

பங்களா மேலாளருக்கு என்னென்ன பணிகள் கொடுக்கப்பட்டன? உள்பட பல்வேறு கேள்விகளை தனிப்படை போலீசார் சசிகலாவிடம் கேட்டனர்.

இந்நிலையில், சுமார் 2 மணி நேரமாக நீடித்த விசாரணை உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 

உணவு இடைவேளை முடிந்த பின்னர், மீண்டும் விசாரணை நடத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this story