கரம் கோர்ப்போம்; கழகம் மீட்போம் : ஓபிஎஸ் தரப்பு அழைப்பு 

21th

'கழகத்து சிப்பாய்களே.. கரம் கோர்ப்போம் வாரீர்..' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் கவிதைச்செய்தி வெளியிட்டுள்ளார்.

அதிமுக தொண்டர்களுக்கு, அவர் விடுத்துள்ள அழைப்பு விவரம் வருமாறு :

* குத்துக்கோல் பிடித்த
கரத்தில்,
செங்கோலை
கொடுத்தது
முதல் தவறு.

கூவத்தூர்
ஏலத்தில்,
கொள்ளைக்காரனுக்கு

மணியடித்து
மகுடம்
சூட்டியது
மறு தவறு...

* கோவிலென
தொண்டர்கள்
கும்பிடும்
கொடநாட்டிலேயே

கை வைத்த
பிறகும்..

கொடியவனை
விட்டு
வைத்தது 
மகா தவறு..

பதவி தந்த
ஒருவருக்கு

பரோல் தரக்
கூடாதென

கடிதம் எழுதிய
நன்றி கெட்ட
கழிசடையை

கண்டும்
கடந்தது
கடும் தவறு..

* ஒப்படைத்த
ஆட்சியை
கொண்டு

கத்தைப் பணம்
குவித்த
போதும்

களவாடி
பிழைத்த
போதும்..

கடிவாளம்
போடாதது
பெருந் தவறு..

இப்போது
அந்த

காசு பணத்தை
கொண்டே

கட்சியையே
களவாட
நினைக்கிற

வெல்லம்
உருட்டி
பழனியை

இனியும்
விட்டு
வைத்தால்

அது..

வெள்ளை
வேட்டி
கட்டுகிற

நமக்கு
வெட்கம் மானம்
இல்லை என்பதாகும்;

எனவே..
ஒளிய வந்த
திருடனை

ஓனராக
விடலாமா.?

ஒன்றரைக்
கோடி
தொண்டர்கள்

உழைப்பில்
விளைந்த
இயக்கத்தை

உருக்குலைக்க 
அனுமதிக்கலாமா.?

* கழகத்து
சிப்பாய்களே..

கரம்
கோர்ப்போம்
வாரீர்..

காவியத்
தாய்
காட்டிய
அடையாளம்

ஓ.பி.எஸ்
தலைமையில்

கழகம்
மீட்க
வாரீர்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story