கோடம்பாக்கத்தில் செண்டை மேளம் வாசித்து, மம்தா பானர்ஜி உற்சாகம்..

mamata

சென்னை கோடம்பாக்கத்தில் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில் கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளம் அடித்து அவரை வரவேற்றனர். பாதுகாப்பு வீரர்களுடன் அங்கு வந்து இறங்கிய மம்தா பானர்ஜி செண்டை மேளம் அடிக்கப்படுவதையும், அதன் 'கணீர்' ஓசையையும் சிறிது நேரம் ரசித்தவாறு வந்தார்.

இசை கலைஞர்களை அவர் புன்னகையோடு பார்த்தார். அப்போது உற்சாக மிகுதியில் இசை கலைஞர் ஒருவரிடம் இருந்த குச்சியை வாங்கி மம்தா பானர்ஜியும் செண்டை மேளத்தை அடித்தார்.

கேரளா இசைக்கேற்ப அவர் மேளம் அடித்ததை பார்த்து அங்கு நின்றவர்கள் ஆச்சர்யப்பட்டனர். பின்னர் சிரித்து கொண்டே குச்சியை அந்த இசை கலைஞரிடம் கொடுத்து விட்டு மண்டபத்திற்கு சென்றார்.
 

Share this story