மருதிருவர் : இன்னுயிர் தந்த தியாக சீலர்கள் - மருது அழகுராஜ்..

By 
maru333

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள், அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். 

ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினர்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். 

இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் என்பது வரலாறு.

இந்நிலையில் மருதிருவர் நினைவைப் போற்றும் விதமாக, கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு :

* மருதிருவர்,

அருப்புக் கோட்டை

நரிக்குடியில்
அவதரித்த

அதிசயச்
சிகரங்கள்..

அரசவைச்
சேவகர்களாக

வாழ்வை
தொடங்கி

அரசர்களாகவே
உயர்ந்த

அபூர்வ சகோதரர்கள்..

* வேலு
நாச்சியாரது

படைத்
தளபதிகளாகி

வெள்ளையரது
தூக்கம்
கெடுத்த

சிம்ம சொப்பனங்கள்..

கும்பினியர்
பாதங்களில்

கூனிக் குறுகி
கிடந்த

தேசத்தின்
தன்மானத்தை

வீரத்தால்
வென்றெடுக்க

இன்னுயிர்
தந்த
தியாக சீலர்கள்..

வரலாற்று
ஆசிரியர்கள்
செப்புகிற

சிப்பாய்
கலகத்திற்கு

ஐம்பத்தாறு
ஆண்டுகள்
முன்பே...

வீரசங்கம்
அமைத்து

விடுதலைக்கு
முழக்கமிட்ட
வீர தீரர்கள்..

* விருப்பாச்சி
கோட்டையில்
படைதிரட்டி

வேலுநாச்சி
தலைமையில்
போர் நடத்தி

சிவகங்கை
சீமையை
மீட்டெடுத்த

சின்ன மருது
பெரிய
மருது ...
என்னும்
சிங்கக் குட்டிகள்...

ஆனந்த
மாயிக்கும்

உடையார்
சேர்வைக்கும்

புத்திரர்களாக
அவதரித்த

புரட்சிக் காரர்கள்..

* கும்பினியர்
கூட்டத்திற்கு
எதிராக

ஜம்புத் தீவு
பிரகடனம்
செய்திட்ட

கிளர்ச்சிக்
காரர்கள்..

கண்ணுக்குள்
அடக்க
முடியா

காளையார்
கோவிலை

கட்டி எழுப்பிய
கலை நயமிகு
மன்னர்கள்..

தங்களது
சமஸ்தானம்
எங்கும்

நிறைந்து
இருந்த

சைவ வைணவ
ஆலயம்
யாவுக்கும்

தங்க வைர
நகைகளை

மானியமாக
அள்ளிக்
கொடுத்த

தன்னிகரில்லா
வள்ளல்கள்...

வெள்ளைக்கார
கூட்டத்தை
விரட்டியடிக்க

கட்டப்
பொம்முவோடு
கரம் கோர்த்து

சதித் திட்டம்
தீட்டியதாக

கருங்காலிகள்
துணை கொண்டு
கைது செய்த

பரங்கியர்
கும்பலை
பார்த்து

நீங்கள்
எம்மை
வாள் முனையில்

வெல்லக்
கிடையாது..

வஞ்சகத்தால்
சிறை
பிடித்த

நீங்களா
வீரர்கள்
என..

காரித்துப்பி
விட்டு

கயிற்றை
முத்தமிட்ட

எங்கள்
மருதிருவர்.

* ஆம்...

இது 
மருதிருவர்
பூமி

இங்கே 

அந்த
மன்னர்களே
சாமி..

இப்படி

வயல்
வரப்பும்

வாய்விட்டு
பாடும்

வரலாறு
இவ்வுலகில்

வேறு 
இருந்தா  காமி..

- இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story