இலங்கையில் பெரும் ஆர்ப்பாட்டம்; கிளர்ச்சி : அதிபர் எங்கே உள்ளார்?

srila1

கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், 

தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்கவேண்டும் என முடிவெடுத்தது. 

பிரதமர் பதவி ஏற்று 2 மாதம் முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். 

இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் எனவும், 

புதன்கிழமைக்குள் அவர் இலங்கை திரும்பி விடுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.
*

Share this story