அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளிக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

By 
senthil1

கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Share this story