எதிர்க்கட்சியினரை காணவில்லை : கே.எஸ்.அழகிரி விமர்சனம்

alagiri

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சியினர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய தோழமை கட்சியின் தோழர்கள் அங்கே பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எங்கள் எதிர் தரப்பினர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காணவில்லை. எனக்கு அது மிக ஆச்சரியமாக உள்ளது. நாங்களும் ஈரோட்டில் தேடி தேடி பார்க்கிறோம். அடக்கமே தெரியாத சிலர் மிகவும் அடக்கமாக பேசுகிறார்கள். அது என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை.

தேர்தல் அவர்களுக்கு நல்ல படிப்பினை தந்திருக்கிறது என கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

Share this story