தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவற்றை காணவில்லை : அமித்ஷா பேச்சு 

amitshahji2

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

மாநில தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, குஜராத் பாஜக கோட்டையாக இருந்தது, இனி எப்போதும் இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இந்த முடிவு மற்ற மாநில தேர்தல்களிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

பிரதமர் மோடிக்கு நாட்டிலும், குஜராத்திலும் கிடைத்த பெரும் புகழே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். இந்த தேர்தலில் புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன, வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்களை அளித்தன,

ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவற்றை காணவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this story