ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
 

eps2

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் 14 பேர் படுகாயம் அடைந்தனர். 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : 

'அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர். 

நீதிமன்றம் மூலம் நியாயத்தைப் பெற்று, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம். அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவியை வகித்த ஓ.பி.எஸ். செய்தது மிகப்பெரிய துரோகம். 

காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர். 

ரவுடிகளை அழைத்து வந்து, கட்சியினரை ஓபிஎஸ் தாக்கியது கண்டிக்கத்தக்கது 

ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைத்த பதவி மற்றவருக்கு கிடைக்கக் கூடாது என எண்ணுகிறார்' என தெரிவித்தார்.
*

Share this story