பாகிஸ்தான் அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் : பயங்கரம் குறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் 

By 
jai2

ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஐ.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இணை மந்திரி ஹினா ரபானி ஹர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

'பாகிஸ்தான் மந்திரி கூறியதை நான் படித்தேன். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹினா ரபானி ஹர் மந்திரியாக இருந்தார். அவர் அரசில் ஹிலாரி கிளிண்டன் கூறும் போது,

'உங்கள் வீட்டின் கொல்லை புறத்தில் பாம்புகளை வைத்திருந்தால் அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று நீங்கள் எதிர் பார்க்க கூடாது. அது உங்களையும் கடிக்கும். ஆனால் சிறந்த அறிவுரைகளை பாகிஸ்தான் விரும்பாது என்று கூறினார்.

எவ்வளவு காலத்திலும் இதை (பயங்கரவாதம்) செய்வோம் என்று நீங்கள் கேள்வி கேட்கும் போது அதை நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் பாகிஸ்தான் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதை பாகிஸ்தான் மந்திரிகள் தான் உங்களுக்கு சொல்வார்கள்.

உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது. பயங்கரவாதம் எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதை உலகம் மறந்து விடவில்லை. பாகிஸ்தான் தனது செயலை சுத்தப்படுத்தி நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story