பசும்பொன் தேவர் ஜெயந்தி : இனி ஒரு விதி செய்யும் அக்டோபர் புரட்சி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள் என்பதால், அரசு சார்பில் இப்போதே விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே இந்த ஆண்டு நடைபெறும் பசும்பொன் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்திற்கு வருகிற 30-ந்தேதி வரும் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் பசும்பொன் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி குறித்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு :
* முக்குலத்தோரின்
மெக்கா...
முருகன் பங்காளிகளின்
ஜெருசலேம்..
நேதாஜி
நேசர்களின்
முக்திநாத்
எக்குலத்து மக்களும் ஏற்றுப் போற்றுகிற ஏழாம் படைவீடு.
பசும் பொன் சீமைக்கு...
* தேசத்து விடுதலைக்கு வேல் தாங்கியும் மார் ஏந்தியும் நின்ற
வெள்ளந்தி மக்கள்
முளைப்பாரி எடுத்து முடி காணிக்கை
கொடுத்து..
குலவை போட்டு
கும்பிடும்
நமது...
குருபூஜை
கும்ப மேளாவுக்கு..
சிலர் ஒப்புக்கு வருவார்கள்..
பலர் ஓட்டுக்காக வருவார்கள்..
* கூடவே,
முக்குலத்து அரசியலை முடித்து விட வேண்டும் என்னும்
காழ்ப்புணர்ச்சி கொண்ட
கயவர்களும்
கருங்காலிகள்
கைக் கூலிகள்
துணையோடு
விருப்பமின்றி
விஜயம்
செய்வார்கள்...
இதனை..
எதிரிகளை
எப்போதும் வென்று,
துரோகத்திடம் மட்டுமே தொடர்ந்து வீழுகிற
மானத்திலும்
ஞானத்திலும்
வீரத்திலும்
என்றும் தாழாத முக்குலத்து மக்கள்
உணர்ந்து
உற்று
நொக்கி..
முடிவெடுக்கும்
நன்னாளாகளாக
இந்த...
அக்டோபர் புரட்சி
அடையட்டும்...
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.