தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

By 
rss rally

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.

Share this story