அரசியல் சதுரங்கம் : முதலமைச்சர் ஸ்டாலின் - மம்தா பானர்ஜி சந்திப்பு..

talinmamat

* மணிப்பூர், மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று  (புதன்கிழமை) சென்னை வருகிறார். இந்த நிலையில் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2-ந் தேதி (நாளை) மாலை தமிழகத்துக்கு வருகை தரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச உள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெலிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் உடைமைகள் அதிகாரிகள் முழுமையாகச் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் மொத்தம் 9.95 கிலோ எடை கொண்டதாக இருந்துள்ளது. இது சர்வதேச சந்தையில் ரூ.69.95 கோடி மதிப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். பயணி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this story