அரசியல் சதுரங்கம் : மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பு?

By 
uddhav

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். 

இதற்கிடையே, சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து நீடிப்பார். 

வாய்ப்பு கிடைத்தால், சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம்' என தெரிவித்தார்.
*

Share this story