அரசியல் சதுரங்கம் : 3 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..

eci2

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டது.

அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் நடைபெறுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story