ஆம் ஆத்மி கட்சிக்கு, பிரதமர் மோடி நேர்மை சான்றிதழ் வழங்கியுள்ளார் :  கெஜ்ரிவால் பேச்சு

By 
kejri4

டெல்லியில், நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசியபோது கூறியதாவது:-

அவர்களால் (பா.ஜ.க.) ஒரு எம்.எல்.ஏ.யைக்கூட டெல்லியில் வாங்க முடியவில்லை. எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒருவர் சிறையில் உள்ளார். 2 பேர் வெளிநாட்டில் உள்ளனர். ஒருவர் சபாநாயகர். (நம்பிக்கை வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மியின் 58 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.)

துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ. சோதனைகள் நடத்தியபின்னர் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டால் வாக்கு சதவீதம் மேலும் 2 சதவீதம் கூடும். மணிஷ் சிசோடியா வங்கி லாக்கரை சி.பி.ஐ. திறந்து பார்த்தது, ஆனால் அவருக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு அழுத்தம் தருகின்றனர் 

மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக கூடுதலாக எதையும் சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பிரதமர் நேர்மை சான்றிதழ் வழங்கி உள்ளார்" என குறிப்பிட்டார்.

70 இடங்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளன.

Share this story