பாதயாத்திரை வெற்றிக்காக ராகுல் காந்தி பிரார்த்தனை..

By 
prayer

அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறது. காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்கிறார்கள்.

150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையின் போது நாடுமுழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையை தொடங்கும் முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணி அளவில் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் அவர்களை பார்த்து கையசைத்தபடியே நினைவிடத்துக்குள் சென்றார். அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. காலை 7.28 மணிக்கு ராகுல்காந்தி அந்த தரைவிரிப்பில் அமர்ந்து பிரார்த்தனையை தொடங்கினார்.

காலை 7.44 மணி வரை 16 நிமிடங்கள் அவர் பாத யாத்திரை வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Share this story