ராகுல் பாதயாத்திரையில், காங்.எம்.பி. திடீர் மரணம்..

mpdead

பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.

ஜலந்தர் அருகே உள்ள பிலாப்பூர் பகுதியில் ராகுல் காந்தி இன்று காலை நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார். திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக சந்தோக்சிங் சவுத்ரி ஆம்புலன்சில் பக்வாரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் சிறிது நேரத்திலேயே இறந்தார். மாரடைப்பு காரணமாக காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி நடைபயணத்தில் காங்கிரஸ் எம்.பி. உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவால் பஞ்சாப் காங்கிரசார் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சந்தோக்சிங் சவுத்ரி 1946-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி பஞ்சாப் மாநிலம் ஜலநகர் மாவட்டம் காலிவால் பகுதியில் பிறந்தார். வக்கீலான அவர் பஞ்சாப் காங்கிரஸ் மந்திரி சபையிலும் இடம்பெற்று இருந்தார். 2014 பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.

Share this story