சாட்டையால் அடித்துக்கொண்டார் ராகுல் : வைரலாகும் நிகழ்வு..

rahulji

தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி கன்னியாகுமாரியில் நடைபயணத்தை தொடங்கினார். காஷ்மீர் வரை அவர் பாத யாத்திரையாக செல்கிறார்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பயணத்தை முடித்த அவர் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் சென்று வருகிறார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட் டத்தில் நடைபயணத்தின்போது சில தொண்டர்கள் பஸ் கூரை மீது ஏறி நின்று ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைப் பார்த்த ராகுல் காந்தி ஆர்வ மிகுதியில் பஸ் படிக்கட்டு வழியாக மேற்கூரைக்கு ஏறினார். அவர்களுடன் ராகுல் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து இன்று ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க 'திம்சா' நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார்.

இந்நிலையில், தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பொனாலு பண்டிகையில் பங்கேற்றார். அங்கு, பண்டிகையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this story