சர்ச்சை பாதிரியாருடன் ராகுல் கலந்துரையாடல் : பாஜக கடும் கண்டனம்

padayatra2

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம் சென்று அங்கிருந்த பாதிரியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது இயேசுநாதர் கடவுளின் வடிவமா, இது சரிதானா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இயேசுவே உண்மையான கடவுள் என்றார். கடவுள் அவரை ஒரு உண்மையான மனிதராக வெளிப்படுத்துகிறார், சக்தியை போல் அல்ல என்றும் ஜார்ஜ் பொன்னையா கூறினார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் ராகுல் காந்தி உரையாடியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Share this story