ஒருமுறை வாசிங்க; ஒருகணம் யோசிங்க : ஈபிஎஸ் குறித்து ஓபிஎஸ் தரப்பு..
 

marudhu73

'ஒருவருக்கும் நன்றி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :

* கொலை 
வழக்கில்
இருந்து

அன்றைய
குத்துக்கோல் பழனியை

காப்பாற்றி
கரை சேர்த்த
முத்துச்சாமி..

கழகத்தில்
உன்னை
கரம் பற்றி
உயர்த்திவிட்ட
சேலம் கண்ணன்..

கட்சியில்
முதல் பதவி
தந்து,

முகவரி கொடுத்த
செங்கோட்டையன்..

* இடையில்
விழுந்த
திரையை
அகற்றி

மறுபிரவேச
வாய்ப்பு
வழங்கிய
இராவணன்..

சிறைக்கு
போகும்
நேரத்திலும்

சிம்மாசனம்
அமைத்துக்
கொடுத்து

முதுகு தட்டி
உன்னை
முதல்வர்
ஆக்கிய
சசிகலா..

* நான்கரை
ஆண்டுகள்
சம்பந்தி
சகிதமாக

ஆண்டு அனுபவிக்க,

ஆட்சிக்கு
ஆதரவு தந்த
ஓ.பி.எஸ்..

* ஒற்றுமைக்கு
உதவி செய்து

பதவி சுகம்
காண
பக்கத் துணை
நின்ற பா.ஜ.க..

* இப்படி
ஒருவருக்கும்
நன்றி 
இல்லாத
உன்னை

புதைப்புக்கு
பிறகும்
புழுக்களும்
புறக்கணிக்கும்;

துரோகம்
என்ற
சொல்லுக்கு..

தரைப்பாடி
பழனிச்சாமி
என்றே

தமிழ்
அகராதியும்
பொருள்
உரைக்கும்..

இது சத்தியம்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story