முதல்வரின் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் : மாநகராட்சி உத்தரவு

punjab

பஞ்சாப் முதல்வரின் சண்டிகர் இல்லத்திற்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

அபராதத்தை செலுத்தும்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பப்பட்டுள்ளது. 

மாநகராட்சி அனுப்பி உள்ள சலானில், 'வீட்டு எண்-7, செக்டார்-2, சண்டிகர்' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து கூறுகையில், 

"முதல்வரின் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டுவதாக பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர். குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. 

இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்" என்றார்.
*

Share this story