காவித்துண்டும், கைக்கூலிகள் முரண்டும் : ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் தரப்பு விளாசல்

marudhu74

மாநில முதல்வரது பதவியேற்பு விழாவுக்குப்போன ஓ.பி.எஸ். க்கு அம்மாநில பா.ஜ.க வினர் காவித்துண்டு அணிவித்து அன்போடு வரவேற்றதையும், பெருந்தன்மையோடு ஓ.பி.எஸ். அதனை அணிந்து கொண்டதையும் கையில் எடுத்துக்கொண்டு,எடப்பாடியின் பெய்டு பேச்சாளர்கள் சிலர் ஓ.பி.எஸ்.ஸை விமர்சித்து வருகின்றனர்.

ஒரு விழாவுக்கு போகுறபோது, அந்த விழாவை நடத்துபவர்கள் தங்களது பாரம்பரியம் சார்ந்த உடைகளை அடையாளங்களை அணிவிப்பதும், அதனை நாகரீகத்தோடு ஏற்றுக்கொண்டு அணிவித்தவர்களை மகிழ்விப்பதும் வழக்கான ஒன்று.

உதாரணத்துக்கு, இஃப்தார் விழாவுக்கு போகிறபோது இஸ்லாமிய பெருமக்கள் தொப்பி தருவதை அணிந்து கொள்வது.. விவசாயிகள் மாநாட்டில் பச்சைத்துண்டு அணிவிப்பதை பாசத்தோடு ஏற்றுக்கொள்வது..

அதுபோல, மலைவாழ் பழங்குடி மக்களின் விழாக்களில் அவர்கள் தரும் ஆடைகளை அணிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து  நடனம் ஆடுவது போன்ற நிகழ்வுகளை சொல்லலாம்.

அதற்காக, உடனே  இஸ்லாமியராக மாறிவிட்டார் என்பதோ பழங்குடி மக்கள் சமுதாயத்தோடு இணைந்து  விட்டாரா என்பதெல்லாம் கூமுட்டைகளின் குற்றச்சாட்டாகும்.அவை, உள்நோக்கம் கொண்ட நரிகளின் ஊளையிடுதலாகும்.

இன்னும் சொல்லப் போனால்,1998 ம் ஆண்டு திருநெல்வேலியில் புரட்சித்தலைவி அம்மா நடத்திய அ.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அத்வானிக்கு அதி.மு.க.வினர்  அவரது சட்டையில் குத்திவிட்ட அ.தி.மு.க பேட்ஜை கடைசிவரை  அவர் கழற்றாமல் அணிந்துகொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.

அந்த பேட்ஜில் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது...

அதனால, பொது அறிவும் பொதுவாகவே அறிவும் இல்லாத எடப்பாடி, ஓ.பி.எஸ். காவித்துண்டு அணிந்திருந்த பா.ஜ.க.பதவியேற்பு விழாவை மையப்படுத்தி, அந்த  ஒரு மணி நேர நிகழ்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பது கேவலமான காரியமாகும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story