ஆளுநரை மாத்து, அண்ணாமலைய மாத்துன்னு அலறுவதை விட்டுவிட்டு, இதை மாத்துங்க : மருது அழகுராஜ் கருத்து

marudhu36

தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே சில விஷயங்கள் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர். 

கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒரு மனு தயாரித்து அதில் கையெழுத்திட்டனர். இந்த மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் கொடுக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. 

இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு வருமாறு :

'ஆளுநரை மாத்து, அண்ணாமலைய மாத்துன்னு அலறுவதை விட்டு விட்டு,
மொதல்ல.. போற இடமெல்லாம் பொதுமக்களிடம் பொறுப்பற்று நடக்கும் பொன்முடிய மாத்துங்க..

புலம்பல் முதலமைச்சர் என்னும் பொதுக் கருத்தை மாற்றி, தவறு செய்தால் தண்டிக்கும் கறார் முதல்வர் என்னும் கருத்தை உருவாக்குங்க..'

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story