வெற்றிதானே மக்களிடம் லட்சணத்தை சொல்லும் : எடப்பாடிக்கு மருது அழகுராஜ் அறிவுறுத்தல் 

marudhu59

'தன்னளவில் தனித்து நின்று ஜெயிப்பதற்கு எடப்பாடி ஒன்றும் புரட்சித்தலைவரோ அல்லது புரட்சித்தலைவி அம்மாவோ அல்ல' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் பேசியதாவது :

'இன்றைய அரசியல் சூழ்நிலையில், பாஜக தயவு எடப்பாடி பழனிசாமிக்கு தேவையில்லை. திமுகவின் குச்சிக்கு ஆடுகிற குரங்குக் குட்டியாக ஆடுகிறார் என நம்புகிறேன். 

தன்னளவில் தனித்து நிற்பதற்கு, எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சித்தலைவரா? அல்லது புரட்சித்தலைவி அம்மா ஆளுமையா? 

அவர்களின் வசீகரம் படைத்தவர் இவர் நிச்சயம் இல்லை. அந்த நட்சத்திர அந்தஸ்து இவருக்கு துளியும் கிடையாது.

கடந்த 10 தேர்தல்களில் உள்ளாட்சித் தேர்தல் உள்பட, ஏற்பட்ட தோல்விகளுக்கு எடப்பாடியாரே பொறுப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். 

இதனை ஒன்றரைக் கோடி தொண்டர்களும் மிக வருத்தப்பட்டு கண்டிக்கிறார்கள். இதனை உணராத எடப்பாடி பழனிசாமி, தான் இருக்கும் வீட்டுக்கு தீ வைக்கிறார் என உறுதியாகச் சொல்வேன்.

தேர்தலுக்கு செலவு செய்யும் பணபலம் எடப்பாடியாருக்குத்தான் இருக்கிறது என்றால், அவரைவிட பணபலம் படைத்தவர் ஒருவர் கட்சிக்குள் வந்தால், அவரிடம் அண்ணா திமுகவை ஒப்படைத்து விட முடியுமா?

அண்ணா திமுக என்பது, ஒரு மக்களின் நலவாழ்வுக்கான சேவை அமைப்பு. இது கார்ப்பரேட் கம்பெனி அல்ல.

இந்த ஒப்பற்ற பேரியக்கத்தை, அதிமுகவை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த.. இந்தியாவிலேயே மூன்றாம் பேரியக்கமாய் ஒளி வீசிய பேரியக்கத்தை..

மொத்தத்தில், நல்லா இருந்த ஒரு கட்சியை நாலு துண்டாக்கிய எடப்பாடியை எண்ணி தொண்டர்கள் புலம்புகின்றனர். 

இந்நிலையில், எத்தனையோ நிலைப்பாடுகளில் கட்சியின் நலன் கருதி, மிக பெருந்தன்மையாய் ஓபிஎஸ் விட்டுக் கொடுத்திருக்கிறார். இதில், பெற்றுக் கொண்டவர் இபிஎஸ். 

இந்நிலையில், பாஜக ஒன்றுபட்டால் வென்று காட்டலாம் என அதிமுக தரப்பில் மிகவும் முயன்று வருகிறது. இதில் ஒருவருக்கு ஒருவர் உதவியும் பயனுமே அரசியல் நிலை. இதனை உணர்வதே கடமை. கட்சியின் நலன்.

என்றும், வெற்றிதானே மக்களிடம் லட்சணத்தை சொல்லும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story