கேரள முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம்...

mks12

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த அவர், அவருக்கு திராவிட மாடல் என்ற புத்தகத்தை வழங்கினார். 

இந்நிலையில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Share this story