தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? : அண்ணாமலை கேள்வி 

By 
annamalai11

தமிழக போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களுக்கு, அதேபோல புள்ளி விவரங்கள் கொண்ட மறுப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று தமிழக காவல்துறை தலைமையகத்திலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது.

இது இந்நாள் தமிழக காவல்துறை டிஜிபியாகிய திரு சைலேந்திர பாபு அவர்களின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும் இந்நாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைபட்டுள்ளேன்.

தமிழக காவல்துறை டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறையில் இருக்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் கீழ்க்காணும் பகுதிகளை இதுவரை கண்டிருக்கமாட்டார் என்பதை அவர் வழங்கிய பத்திரிக்கை செய்தி தெளிவுபடுத்திவிட்டது. இந்த பகுதிகளின் விளக்கங்கள் இந்த அறிக்கையில் உள்ளது.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் திரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது இது தான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்.

1998ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தன போக்கே சென்ற வாரம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணம் உளவுத்துறை ஏடிஜிபி திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களும் டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்களும் தான் மிதிவண்டி ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தை தன் பணியில் காட்டியிருந்தால் இது போன்ற நிகழ்ந்திருக்காது.

சம்பவங்கள் விசாரணையின் போக்கை திசைதிருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம். பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1515 தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார் அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார் இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல்துறையினரின் - கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியது எப்படி?

இதற்கு முன் திண்டுக்கல் எஸ்பியாக நீங்கள் செய்த 'சாதனைகள்' காஞ்சிபுரம் டிஐஜியாக செய்த சாதனைகளை மக்கள் மறத்திருக்கலாம். நான் மறக்கவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே என்பதில் வருத்தமே .

வாழ்க கலைஞர். வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this story