தொழில்துறையில் தமிழகம் மிக வேகமாக முன்னேறுகிறது : பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By 
hu

தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, 

‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கிப் பேசினார்.

அவர் பேசி முடித்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :

தொழில் துறையை பொறுத்தவரை, தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில், எந்த மாற்றமும் கிடையாது. 

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்து இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல. 

இதில், உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளை கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் அது சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அன்னிய நேரடி முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தை தொழில்துறை மாநிலமாக உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் தொழில் முதலீடுகளை பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. தினத்தந்தி பத்திரிகை தலைமையகத்திலும் பாராட்டி இருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமானால் தொழில் வளர்ச்சி மிகவும் தேவையாகும். அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர்களுக்கும், தொழில் துறையினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

Share this story