சிரிப்புச் சர்வாதிகாரி தரைப்பாடியை, தமிழகம் சொல்லிச் சிரிக்கிறது : ஓபிஎஸ் தரப்பு சட்டையடி

marudhu33

எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, 'இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது' என்றார்.

இதுதொடர்பாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ், கவிநடையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

கழகத்தை நிறுவியது மக்கள் திலகம்..

கட்சிக்கு அலுவலக இடம் தந்தது அன்னை ஜானகி ராமச்சந்திரன்..

இரட்டை இலையை தேர்வு செய்ததும், முதல் வெற்றியை பெற்றதும் மாயத்தேவர்.

ஆட்சியை பிடித்ததும், அம்மாவை அடையாளம் காட்டியதும் புரட்சித் தலைவர்.

அதன்பின், சத்யாவின் பிள்ளை ஒப்படைத்து போனதை, முப்பத்தைந்து வருடங்கள் கட்டிக் காத்ததும், கண் இமையாய் போற்றியதும்,

முக் கடல் சூழ்ந்த பாரதத்தின் மூன்றாம் பெரும் இயக்கமாக முடிசூட்டிப் போனதும் சந்தியாவின் பிள்ளை புரட்சித் தலைவி அம்மா..

அவர், மணிமுடி இழக்கும் சூழல் வந்த போதெல்லாம் தான் சுமந்த தலைப்பாகையை..அவர் நம்பி ஒப்படைத்ததும்..

அதனை காலத்தே திருப்பித் தந்து கழகத்திற்கு உலகம் தந்த பரதன் என்று தாயிடம் இருந்து தரச்சான்று
பெற்றதும்.. 

உலகில் ஒப்பிட்டுச் சொல்வதற்கு இன்று வரை ஈடு இணை இல்லாத  உத்தமத்தலைவன் ஓ.பன்னீர்செல்வம்
ஒருவர் தான்..

இப்படி, மூன்று முறை முடி தரித்த மும்முடிச் சோழனை..

கூவத்தூர் கோமாளி, கம்பராமாயணம் இயற்றியது சேக்கிழார் என்பதை கண்டறிந்த புத்திசாலி
எடப்பாடி.. 

நீக்குகிறேன் என்பதும், மீண்டும் சேர்ப்பதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை என இடி அமீன்
தரைப்பாடி இறுமாப்பு பேசுவதும்..

பார்க்கும்போது, " செத்த பயலே..நாறப் பயலே.." என்று ஜி.பி.முத்து வார்த்தைகளில் சிரிப்புச் சர்வாதிகாரி
தரைப்பாடியை தமிழகம் சொல்லிச் சிரிக்காதோ..

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருதுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story