தொண்டர்களின் ஒரே தேர்வு, ஓபிஎஸ். என்கிற ஹீரோ தான் : மருது அழகுராஜ் விளக்கம் 

marudhu42

ஒரு ஹீரோ தொடங்கி, ஒரு ஹீரோயின் வழி நடத்திய ஒப்பில்லா இயக்கமாம் அண்ணா தி.மு.க வுக்கு, ஓபிஎஸ்.என்கிற ஹீரோதான் தொண்டர்களின் ஒரே தேர்வு என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அண்ணா திமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"விமர்சிக்க வாய்ப்பு கொடுக்காத அளவில் விசுவாசம்..

வரியில்லாத நிதி நிலை அறிக்கைகள், வர்தாபுயல் மீட்பு பணிகள், ஐல்லிக்கட்டு உரிமை மீட்பு, கிருஷ்ணா நதி நீர் வரவழைப்பு என்னும் கடமையில் குன்றா உழைப்பும் திறமையும்..

கட்சியை வெற்றிப்பாதையில் வழிநடத்தும் யுக்திகளை அம்மாவிடம் பயின்ற சிறப்பு தலைமைத்தகுதி..

இப்படி, அரசியல் அத்தியாயம் ஆராதிக்கும் ஹீரோவாக ஓ.பி.எஸ் என்றால்...

எடப்பாடியோ.. குத்துக்கோல் கொலைகள், சிறைபோன கிரிமினல் கதைகள்..

கூவத்தூர் தொடங்கி, கொடநாடு வரை, முகம் சுழிக்க வைக்கும் முறைகேடுகள்..

நீதிமன்றங்களில், தலை தப்புமா என தவம் கிடக்கும் ஊழல் உள்ளடி வழக்குகள்...

இப்படி, ரசிப்பதற்கு ஏதுமற்ற ஒரு வில்லனின் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற, குற்ற ரேகைகளின் குத்தகைதாரர் எடப்பாடி என்பதால்..

ஒரு ஹீரோ தொடங்கி, ஒரு ஹீரோயின் வழி நடத்திய ஒப்பில்லா இயக்கமாம் அண்ணா தி.மு.க வுக்கு, ஓ.பி.எஸ். என்கிற ஹீரோ தான் தொண்டர்களின் ஒரே தேர்வு.."

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story