கழகமே உலகமென வாழும் கறைபடியா தொண்டர்களே.! : ஓபிஎஸ் தரப்பு முக்கிய அறிவிப்பு

marudhu30

தன் விருப்பத்துக்கு ஏற்ப குறைத்து, கூட்டி அ.தி.மு.க. எனும் அழகிய கிரீடத்தை, தனது கத்தை பணத்தை கொண்டு, அடகு பிடித்து  அபகரிக்க பார்க்கிறார் எடப்பாடி.

ஆனால், ஓ.பி.எஸ்.ஸோ அ.தி.மு.க.வின் நிறுவனர் புரட்சித்தலைவரும், அவருக்கு பின் கழகம் காத்த அம்மாவும் சூடிய கிரீடத்தின் மாண்பை குலைக்காமல், அதன் மகிமை உணர்ந்து, சேதாரமில்லாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறையின் கரங்களுக்கு  சேர்க்க நேர்மையோடு பாடுபடுகிறார் என்றால்..

உண்மையான புரட்சித்தலைவரின் தொண்டனும், புரட்சித்தலைவி அம்மாவின் பிள்ளைகளும், பக்கத் துணை நிற்க வேண்டியது..பதறாத பண்பாளர் ஓ.பி.எஸ்.பக்கம் தானே.. என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இதுகுறித்து அதிமுகவின் ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கும் கவிநடையில் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு :

கழகமே உலகமென வாழும் கறைபடியா தொண்டனே.. அடுத்த தலைமுறையும் நம்மை நேசிக்க ஒரு முறை நீ யோசிப்பாய்..

ஆம், எம்.ஜி.ஆரின் விதிகளை மாற்றாமல் ஏற்றுக் கொண்டால் எல்லாமும் சரியாகும்...

அம்மாவுக்கே நிரந்தர பொதுச் செயலாளர் இருக்கை என்பதை அப்படியே விட்டு வைத்தால், அத்தனையும் சரியாகும்..

தொண்டர்கள் தேர்வுதனை, தொந்தரவு செய்யாவிட்டால், தொல்லைகள் நீங்கி விடும்..

அபகரிப்பு முயற்சியை தரைப்பாடி அடிமைகள், அடியோடு நிறுத்தினால் அத்தனையும் சரியாகும்.

முனுசாமி, ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார் போன்ற முகச்சுழிப்புகளை ஒடுக்கினால், மொத்தமும்
சரியாகும்..

கூடவே, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் போன்ற முத்திப்போன பாம்புகளின் விஷப்பல்லை
பிடுங்கினால், விடிவுகாலம் பிறந்து விடும்..

தங்கமணி, வேலுமணி, என்னும் கரன்சி வெறி மனிதர்களை கழித்துவிட்டால், கழகமே புனிதமாகும்..

அப்படியே, குட்காவிலும், கொரானாவிலும், கொடநாட்டிலும் கொள்ளை அடித்த நல்லவர்களை கொத்தோடு
தூக்கிவிட்டால், கழகத்தை பிடித்த பீடை அடியோடு நீங்கி விடும்..

மொத்தத்தில், எடப்பாடி இல்லாவிட்டால் எல்லாமும் சரியாகும்.., எம்.ஜி.ஆரின் கட்சி மீண்டும் ஏழைகளின்
சொர்க்கமாகும்..

இதெல்லாம் நடந்துவிட்டால், இரண்டாயிரத்து இருபத்தாறில் மீண்டும் இலையாட்சி மலர்ந்து விடும்..

எனவே, ஒன்றரைக்கோடி தொண்டர்களும் ஓரணியாய் திரள்வோம்..

ஒற்றுமைக்கு பாடுபடும் ஓ.பி.எஸ்ஸின் ஒற்றைத்தலைமைக்கு உணர்வோடு கரம் கொடுப்போம்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் அதிமுக தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

*

Share this story