போலீசுக்கு தெரியும்.. யாரு நல்லவன் கெட்டவன்னு, பார்த்துக்கலாம் : மருது அழகுராஜ் 

koyyala

'இன்று வெகு நாட்களுக்கு பிறகு, ஒரு முன்னாள் அமைச்சரை  சந்திக்க நேர்ந்தது; என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

' வெகு நாட்களுக்கு பிறகு, ஒரு முன்னாள் அமைச்சரை  சந்திக்க நேர்ந்தது. பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, அரசியல் பக்கமா பேச்சு நகர்ந்தது.

நான் அவரிடம் கேட்டேன் உங்க மனட்சாட்சிய தொட்டுச் சொல்லுங்க., எடப்பாடி செய்வது தப்பில்லையா என்று கேட்டேன்.

அவர் சொன்னார்.. தம்பி போலீஸ் ஸ்டேஷன் பக்கமா போய் பாருங்க, பெரும் பாலும் தப்பு செஞ்ச ஆளுக பக்கமா தான் போலீஸ்காரன் சாய்வானுக, காரணம்..அவனுகிட்ட தான் காசு கறக்க முடியும். 

தப்பு பண்ணாதவன், தன் தரப்பு நியாயம் நீதிய சொல்லிக்கிட்டு இருப்பானே தவிர, அவனுகிட்ட பணம் பாக்க முடியாது. ஆனாலும் போலீசுக்கு தெரியும் யாரு நல்லவன் கெட்டவன்னு.

அது மாதிரி தான் எடப்பாடி அயோக்கியன்னு அத்தனை பயலுகளுக்கும். தெரியும். ஆனாலும் அவன்கிட்ட தான் பணம் இருக்குன்னு பலாச்சுளைய ஈ மொய்க்கிற மாதிரி  திரியிறானுக.

ஆனாலும், கடைசியில் எப்படி கருணாநிய எதிர்த்து எம்.ஜி.ஆர் ஜெயிச்சாரோ... எப்படி ஜானகி அம்மாவ எதிர்த்து அம்மா ஜெயிச்சாங்களோ.. அது மாதிரி, ஓ.பி.எஸ்.தான் இறுதி வெற்றியை பெறுவார்.

ஏன்னா, கொடுத்து கொடுத்து வெகுகாலத்துக்கு விசுவாசத்தை தக்க வைக்க முடியாது. எடப்பாடி தருவதை குறைக்கும் போதும், அல்லது நிறுத்தும் போது.. அந்த ஆளு தனி ஆளாகத் தான் நிற்பார்.

இப்படி மனம் திறந்து பேசியவர் ஓ.பி.எஸ்.கிட்டே சொல்லுங்க. விரைவில், நல்ல முடிவை எடுப்பேன்னு அவர் சொன்ன போது... ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. 

என தனது அனுபவ நிகழ்வுகளை தெரிவித்துள்ளார்.

*

Share this story