லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் : கவர்னர் தமிழிசை கிண்டல் பேச்சு
Sat, 3 Dec 2022

லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக பேசியுள்ளார்.
கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறும்போது, விமானத்தில் சென்றாலோ அல்லது காரில் சென்றாலோ பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக நினைப்போம். ஆனால், தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வரும்போது, என்னடா இது வாழ்க்கை என்று தோனுகிறது.
ஆக எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதனை கொடுப்பதே அரசின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிப்டில் சிக்கிக் கொண்டதை சுட்டிக்காட்டி புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக கூறியுள்ளார்.