மக்கள் ID என்ற தனி அடையாளம் எதற்கு? : சீமான் கேள்வி 

seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாட்டிற்கென தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை.

* ஏற்கனவே குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ID என்ற தனி அடையாளம் எதற்கு?

* ஆளுநருக்கு வேண்டுமென்றால் தமிழகம் என்பது சரியாக இருக்கும்.

* எங்க நாடு தமிழ்நாடு, அவரு பேசுறதை எல்லாம் இந்த காதுல வாங்கி, இந்த காதல விட வேண்டியதுதான்.

* எங்கள் நாடு தமிழ்நாடு.. விரும்புபவர்கள் இங்கு இருக்கலாம்.

* தமிழ்நாட்டு முதலமைச்சர் எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Share this story